Map Graph

இராசா லகாமகவுடா அணை

இந்தியாவின் கர்நாடக மாநில அணை

இராசா லகாமகவுடா அணை (Raja Lakhamagouda dam) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாயும் கிருட்டிணா நதிப் படுகையில் காட்டபிரபா ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ளது. இதை இட்கல் அணை என்றும் அழைக்கிறார்கள். வடக்கு கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்திலுள்ள இட்கல் கிராமத்தில் இராசா லகாமகவுடா அணை உள்ளது. 62.48 மீட்டர் உயரமும் 10 செங்குத்து முகடு வாயில்களும் கொண்ட இந்த அணையின் மொத்த மேற்பரப்பு 63.38 சதுர கிலோமீட்டர்களாகும். 51.16 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளும் அளவு கொண்ட ஒரு பெரிய நீர்த்தேக்கமாக இது பரந்து விரிந்துள்ளது.

Read article
படிமம்:Hidkal_Dam.jpg